ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் வருகையையொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த மோகன் பாகவத், அங்கிருந்து சாலை மார்க்கமாக கோச்சடை பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் பயணித்த சாலை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் தென் மாவட்ட ஆர்எஸ்எஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
















