மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே 40 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் முதலமைச்சரின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தவெக அறிவித்துள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் பாதுகாப்பு கருதி, கர்ப்பிணிகள், சிறார்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது…
















