மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதன்மையான பணி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இருசக்கர வாகனத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சேவா யாத்ரீகர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான அவர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், தன்னலமற்ற முறையில் சமூகத்திற்காக பணியாற்றும் ஆர்வலர்கள் தமக்கு மிகுந்த உத்வேகத்தை அளிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















