ஜெம் வீரமணி போக்சோ வழக்கு பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக காவல்துறையின் முந்தைய விசாரணை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் மாற்றம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு காவல் அகாடமியின் இயக்குநராகவும், கூடுதல் காவல் தலைமை இயக்குநராகவும் பணியாற்றி வந்த அருண் ஐபிஎஸ், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள ராஜீவ் குமார், மறு உத்தரவு வரும் வரை காவல் அகாடமி இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த கண்ணனும் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவை மேற்கு மண்டல காவல் தலைவராக பணியாற்றி வரும் ரம்யா பாரதிக்கு, கூடுதலாக கோவை மாநகர காவல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோயம்பேடு சரக உதவி காவல் ஆணையராக பணியாற்றி வந்த எம்.ஏ. யாஸ்மினும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். GFXOUT
















