தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கர்நாடகா அரசு நிறுத்தி வைத்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள, 50 சதவீத நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர்வாசிகளை நியமிப்பதை கட்டாயமாக்க அம்மாநில அரசு திட்டமிட்டது.
அரசின் இந்த திட்டம் தொழில்துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முடிவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாதயாரிப்பு நிலையில்தான் உள்ளதாகவும், விரிவாக ஆலோசிக்கப்பட்ட பிறகு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.