ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகி மகன் உட்பட மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகி மகன் உட்பட மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில், கடந்த 5ம் தேதி ரவுடி கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில், சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம், என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள 10 பேரிடம் காவல் விசாரணை முடிந்து பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராக் படுகொலை வழக்கில் மலர்கொடி, ஹரிஹரான் மற்றும் திருவள்ளூர் மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன் விரோதம் இருந்தது தெரிய வந்ததை அடுத்து, அவரிடம் தனிப்படை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.