அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதுதொடர்பாக பைடன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக உணர்வதாக, தெரிவித்துள்ளார். மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.