கோயம்பேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி 7 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டையார்பேட்டையை சேர்ந்த லாரி ஒட்டுநரான சுரேஷ், கிண்டியில் இருந்து கோயம்பேடு நோக்கி லாரியில் சென்றுகொண்டிருந்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வாகனங்களும் சேதமடைந்தன.