சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் கூலித் தொழிலாளி சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலூரைச் சேர்ந்த பழனி மது போதையில் தனது மனைவி அமுதாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால், அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிலையில், பழனி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பழனி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.