இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பணம் பறித்த இருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
ஹரியானாவில் உள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்று, 85 ஆயிரம் ரூபாய் செலுத்ததினால் மலைவாழ் தலங்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா செல்லலாம் என விளம்பரப்படுத்தியது.
இதனை நம்பி புதுச்சேரியை சேர்ந்த ராகுல் கிருஷ்ணா என்பவர் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை இணைய வழியில் செலுத்தியுள்ளார்.
ஆனால் பணம் செலுத்தி பல மாதங்களாகியும் எந்த அழைப்பும் வராததால் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மோசடியில் ஈடுபட்ட அஜய்மேளா, ஓசாமா கான் ஆகிய இருவரை கைது செய்தனர்.