ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் சிறை பிடிக்கப்பட்ட காகத்தை மீட்க பல காகங்கள் ஒன்று கூடிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தபிபாகா தினசரி சந்தையில் கோழிக்கடை நடத்திவரும் ஒருவர் தனது கடைக்கு வந்து தினமும் தொல்லை கொடுத்த காகத்தை கயிற்றால் கட்டிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து காகத்தின் சத்தத்தை கேட்ட 100க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து ஒலி எழுப்பியபடியே வானில் பறந்து வட்டமிட்டது.
காகங்களின் கூச்சலை தாங்க முடியாத கடைக்காரர் தான் பிடித்து வைத்திருந்த காகத்தை விடுவித்தார்.