கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து உபரிநீர், கோதை ஆற்றில் திறந்து விடப்படுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.