பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முடிகிறது. ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்க உள்ள புதிய அறிப்புகள், மற்றும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வருகின்ற ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் காலை 11:00 மணிக்கு நாடாளுமன்றத்தின் பிரதான குழு அறையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.