அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடி செய்து அபகரித்ததாக புகாரளித்தார்.
இது தொடர்பாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவானார். ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த அவரை, கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து பிகாஷ் கொடுத்த புகாரின்பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.