மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாணயத்தின் விலையை, மத்திய அரசு 2 ஆயிரத்து 500 ரூபாயாக நிர்ணயித்துள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் நினைவு நாணயம் வெளியிட வேண்டுமென மத்திய நிதி அமைச்சகத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட அனுமதி அளித்த மத்திய அரசு கடந்த 12-ம் தேதி அதனை அரசிதழில் வெளியிட்டது.
100 ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நினைவு நாணயத்தின் அமைப்பு, விலை உள்ளிட்டவை குறித்து இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகர் தூண் மற்றும் சத்யமேவ ஜெயதே, பாரத் ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும், இந்தியா என ஆங்கிலத்திலும் பொறிக்கப்படவுள்ளது.
நாணயத்தின் மறுபக்கத்தில், கருணாநிதியின் உருவப்படமும், தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம் பெறுகிறது. இந்த நாணயத்திற்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளதாகவும்,
நாணயம் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.