கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நீதிபதி கருணாநிதி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நாகூரைச் சேர்ந்த வாஞ்சிமுத்துவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.