இந்தியர்கள் பலர் தன்னலமின்றி நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் நடைபெற்ற கிராம அளவிலான தொழிலாளர்கள் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டின் முன்னேற்றத்தை பற்றி தான் கவலை கொள்வதில்லை என்றும், அதற்காக பலர் கூட்டாக சேர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்தியர்கள், பல கோடி தெய்வங்களை வழிபட்டாலும், பல மொழிகளில் பேசினாலும், வெவ்வேறு வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலும் மனதளவில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றுதான் எனவும் அவர் கூறினார்.
கிராம பணியாளர்கள் அனைவரும் சமூக நலனுக்காக அயராது உழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.