தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்த நிலையில், மீண்டும் 500 மதுக்கடைகள் எப்போது மூடப்படும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் 1 டாஸ்மாக் கடைக்கு 5 சந்து கடைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. சந்துக்கடைகளை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.
அரசு நடவடிக்கை எடுக்காததால் சட்டவிரோத சந்து கடைகள் தடையின்றி இயங்கி வருகிறது. திருத்தப்பட்ட மதுவிலக்கு சட்டத்தின்படி சந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் 500 மதுக்கடைகள் மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.