டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் 75 உரைகள் கொண்ட புத்தகத் தொகுப்பை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் முதலாமாண்டு பதவிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தனித்துவமிக்க 75 உரைகளின் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். WINGS TO OUR HOPES என்று பெயரிடப்பட்டுள்ள புத்தகத்தை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் சஞ்சய் ஜஜு ஆகியோருடன் இணைந்து வெளியிடுவதில் மகிழ்ச்சி எனவும் பதிவிட்டுள்ளார்.