உத்தரப்பிரதேசத்தில் சண்டிகர் – திப்ருகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் சீரமைப்புப் பணி காலையில் நிறைவு பெற்றது.
உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில், திப்ருகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலின் சில பெட்டிகள் மோடிகஞ்ச் – ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே தடம்புரண்டன.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இரவு முழுவதும் தொடர்ந்த சீரமைப்புப் பணி காலையில் நிறைவு பெற்றது.