தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில் நடப்பாண்டிற்கான உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 507 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் குரூப் 2 – என்ற பிரிவிலும் கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட ஆயிரத்து 820 காலிபணியிடங்கள் குரூப் 2- A என்ற பிரிவிலும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிபணியிடங்களுக்கான இந்த தேர்வுகள்
வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெறும் எனவும், தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்தது.
இந்நிலையில், இந்த குருப் -2 மற்றும் 2-A தேர்வுக்கான விண்ணப்பதேதி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் தேர்வர்கள் வரும 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தங்களது விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் எனவும் அதன் பிறகு எந்த ஒரு மாற்றத்திற்கும் அனுமதி கிடையாது எனவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.