தேசப் பணிகளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஆடிட்டர் ரமேஷ் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : அற்புதமான களப்பணியாளரும், மிகச் சிறந்த பேச்சாளருமாகத் திகழ்ந்த தமிழக பாஜக
முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள், இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று.
தேசப் பணிகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர். நாட்டின் வளர்ச்சிக்கும், கட்சி வளர்ச்சிக்கும் கடினமாக உழைத்தவர். கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்தவர். அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் கடின உழைப்பு நிச்சயம் வீண் போகாது. தேசத்திற்காகத் தனது உயிரையே தியாகம் செய்த அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.