தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் ஆடிட்டர் ரமேஷ் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நமது பாரதிய ஜனதா கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும், கொள்கை பிடிப்பு கொண்ட உறுப்பினருமான, மறைந்த சகோதரர் தெய்வத்திரு ஆடிட்டர் V. ரமேஷ் நினைவு தினம் இன்று.
மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தவர், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். 2013-ஆம் ஆண்டு, சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, சகோதரர் ஆடிட்டர் ரமேஷ் ஜி போன்ற துணிச்சல் மிக்க ஆன்மாக்களின் தியாகத்தை, பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் மறக்காது.
அவர்களது தியாகத்தை, பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் நினைவு கூர்ந்து போற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.