இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் கடந்த சில நாட்களாக பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர் பங்கேற்ற போட்டிகளிலும் நடாஷா ஸ்டோன்கோவிச் கலந்துகொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா தமது சமூக வலைதள பக்கத்தில் “4 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பின், நானும் நடாஷாவும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்றும், தங்களின் முடிவை மதித்து ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.