மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி விரைவு ரயில் சேவை - மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!
Sep 12, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி விரைவு ரயில் சேவை – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Jul 19, 2024, 12:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையேயான விரைவு ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், நீலகிரி மாவட்டத்தின் முக்கிய காய்கறி ஏற்றுமதி மையமாகவும் மேட்டுப்பாளையம் திகழ்ந்து வருகிறது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே இயங்கி வருகிறது. மேலும், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கும், பகல் நேரத்தில் சென்னைக்கும் இயக்கப்பட்டு வந்த இணைப்பு ரெயில்கள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

இதனால் அவதியடைந்த மக்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் இருமுறை இயங்கும் வகையில் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கும், மறு மார்க்கமாக வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கும் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல், மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கி வந்த விரைவு ரயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ரயில்வே சந்திப்பில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காணொளி வாயிலாக பங்கேற்று ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: L MuruganMettupalayamcentral minister l murugantuticorin rail
Share
Tweet
SendShare
Previous Post

பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

மனைவியை விவாகரத்து செய்வதாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies