வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கும்.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.