4 புதிய மாநகராட்சி விரிவாக்கம் உள்பட சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது, சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட மசோதாக்கள் சமீபத்திய சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சட்டத்திருத்தங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.