குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவல்துறையினர் பற்றி அவதூறாக பேசியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்தும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியும் 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென அவரது தாயார் கமலா, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சில நிபந்தனைகளுடன் சவுக்கு சங்கரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.