நடப்பு மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சிக்காக ஏராளமான கருத்துகள் மற்றும் ஆலோசனைகன் வந்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகுகளில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பல இளைஞர்கள் நமது சமூகத்தை மாற்றும் நோக்கில் கூட்டு முயற்சிகளை எடுத்துரைப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். MyGov, NaMo செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனைகளை அனுப்பலாம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.