தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் நலிவடைந்துள்ளதால் அதனை தமிழக அரசு உடனடியாக சரி செய்யவேண்டும் என தமிழக கேபிள் டிவி முன்னாள் நிறுவன தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 7 கோடி ரூபாய் அளவிற்கு லாபகரமாக இயங்கி வந்த அரசின் கேபிள் டிவி நிறுவனம் தற்போது சீர் கெட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உடனடியாக புதிய செட்டப் பாக்ஸ்களை வழங்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.