குடிமைப் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்ததாக புகாருக்குள்ளான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பூஜாவின் விண்ணப்பத்தை ரத்து செய்யவும் கோரியுள்ளது. மேலும் விசாரணையில் பூஜா கேத்கர் தனது பெயர், தந்தை மற்றும் தாயின் பெயர், அவரது புகைப்படம், கையெழுத்து, அவரது மின்னஞ்சல் முகவரி, அலைப்பேசி எண் மற்றும் முகவரியை போலியாக கொடுத்து தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.