மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் மலை அடிவாரத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக சென்ற யானைகள், பிளவக்கல் பெரியார் அணைப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.