திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை யொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி திருக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கோயில் கடற்கரையில் இரவு தங்கி வழிபடுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆடி மாத பௌர்ணமியை யொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலில் குவிந்தனர். இதனால், கோயில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.