மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
கிராண்ட் ரோடு பகுதியில் ரூபினா மன்சில் என்ற கட்டடத்தின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.