ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான் வழித்தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல்-காசா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதனால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கி வந்தனர்.
இந்நிலையில் ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் டிரோன்கள் மூலம் வான்வழித்தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், இதனால் அங்குள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் தீபற்றி எரிந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருவதாவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்