ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி, சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி, கடந்த 19-ம் தேதி முதல் நாளை வரை, 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது.
இதனை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரிகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.