காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை ஒட்டி, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மல்லிக்கார்ஜுன கார்கே நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.