21-வது சர்வதேச மாஸ்டர் தகுதிக்கான செஸ் போட்டி , சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கியது.
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சர்வதேச மாஸ்டர் தகுதிக்கான செஸ் போட்டிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி 21-வது சர்வதேச மாஸ்டர் தகுதிக்கான செஸ் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் லோகேஷ், மணிகண்டன், ஆகாஷ் ஆகிய 3 தமிழர்கள் உட்பட ஏராளமான வீரர்கள் பங்கேற்கின்றனர்.