மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்றிவிட்டது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Aug 19, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்றிவிட்டது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jul 21, 2024, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதா? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2014 – 2024 வரையிலான, பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களின் மதிப்பு ரூ.10.76 லட்சம் கோடி. தமிழகத்தின் நேரடி வரிப்பங்கீடை விட, இது இரண்டு மடங்கு அதிகம்.

ஆனால், மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன என்று எதுவும் தெரியாமல், வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே பதிவிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கடந்த 2006 தேர்தலின்போது, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியான, கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.9,386 கோடி நிதியில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது முதலமைச்சருக்குத் தெரியுமா அல்லது பணிகள் நிறைவடைந்ததும் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? திமுகவின் மற்றொரு தேர்தல் வாக்குறுதியான மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.5,800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா? கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய ஒப்புதல் வழங்கிய விவரமாவது முதல்வருக்குத் தெரியுமா? கடந்த 2009 – 2014 வரையில் ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தது சுமார் ரூ. 800 கோடி மட்டுமே. ஆனால்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு மட்டும் ரூ.6,331 கோடிக்கான ரயில்வே திட்டங்களைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உண்மையில் இவை எல்லாம் தெரிந்துதான் பேசிக் கொண்டிருக்கிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை, பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி தமிழகத்துக்கு வழங்கினார்.

ஆனால், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, அமைத்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை எத்தனை? பால் விலை, தயிர் விலை, சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, நடுத்தர மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்றிவிட்டு, வருமானவரி குறித்துப் பேசக் கூச்சமாக இல்லையா? கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், நேரத்திற்கொரு பேச்சு என்று நாடகமாடி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதா? கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற நலத் திட்டங்களை நிறைவேற்றிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரும் காலங்களிலும் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார்.

ஆனால் இங்கு திமுக அரசோ, தாங்கள் செய்யவேண்டிய பணிகளை மறந்து மற்றவர்களை விமர்சிப்பதை முழு நேர வேலையாகக் கொண்டுள்ள போக்கை இனி வரும் காலங்களிலாவது மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: DMK has put a huge financial burden on people's lives! - Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் குரு பூஜை நிகழ்ச்சி!- மோகன் பகவத் பங்கேற்பு!

Related News

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies