திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
Aug 8, 2026, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசு ஆகம விதிகளை மீறி செயல்படுவதாகவும், கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை, எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததை அமைச்சர் சேகர்பாபு மறைப்பதாக குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் பசுத்தாய் கணேசன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருவதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் இல்லை என தங்களை கைது செய்து வருகிறார்கள். எனவும் திமுக அரசு கோவில் சொத்துகள் பற்றி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், திருவானக்காவலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்களை மட்டும் சீரழிக்கும் திமுக அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கினர், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

கோவையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து கோவில்களை மட்டும் திட்டமிட்டு தமிழக அரசு வஞ்சிப்பதாகவும் பிற மத வழிபாட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்துக்களுக்கு அளிப்பதில்லை என குற்றம்சாட்டினர்.

கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே போல கோவை பொள்ளாச்சியில் உள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழகத்தில் கோயில்களில் வழிபாட்டு கட்டணத்தை அகற்ற வேண்டும்,
மற்ற மத கோயில்களுக்கு பண்டிகை காலங்களில் நிதி ஒதுக்குவது போல் இந்து கோயில்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags: Hindu leaders protest against the DMK government!
Share
Tweet
SendShare
Previous Post

குரு பூர்ணிமா – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்றிவிட்டது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies