அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் தனது பெயரை முன்மொழிந்திருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ள ஜோ பைடன், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் பயணம் செய்து நாட்டு மக்களிடையே கலந்துரையாடி வருவதாகவும், ட்ரம்ப்பை வீழ்த்த ஜனநாயகக் கட்சியை ஒன்றுபடுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு 107 நாட்கள் உள்ள நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்றும் கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.