தமிழகத்தில் இந்த ஆண்டு 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 2023 -24ம் கல்வி ஆண்டில் 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2024- 25 கல்வி ஆண்டில் 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போதுமான மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.