திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
கோயிலில் இருந்து புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து அங்கு சர்வ அலங்கார ரூபியாக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
இதனைதொடர்ந்து மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.