2025-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 புள்ளி ஐந்து சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக இருக்குமென பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
476 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பிரச்சனைகள், பருவமழையில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், சில்லறை பணவீக்கம் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதாகவும்,
2023-ம் இல் 6 புள்ளி 7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024-ம் நிதியாண்டில் 5 புள்ளி 4 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம் உயர்ந்திருந்தாலும், மொத்த பணவீக்க விகிதம், கட்டுக்குள் இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.