பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்காக திருப்பூரில் உள்ள பேக் பே இந்தியா நிறுவனம் 10 லட்சம் டீ-சர்ட் பனியன்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.
இதுவரை 70 சதவீத ஆர்டர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 30 சதவீத ஆர்டர்களை முடிப்பதற்கு 6 சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பனியன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே 2023ம் ஆண்டு பிரான்சில் நடந்த ரக்பி உலக கோப்பைக்கான போட்டிக்கும் இதே நிறுவனமே பனியன்கள் தயாரித்து அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.