மத்தியப் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் மீது லாரி மூலம் மண் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேவா மாவட்டத்தில் உள்ள ஹினோட்டா ஜோரோட் என்ற கிராமத்தில் மம்தா பாண்டே, ஆஷா பாண்டே ஆகிய பெண்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உறவினர்களுடன் நிலத் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது மண் கொட்டப்பட்ட நிலையில், அருகில் இருந்த கிராம வாசிகள் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்களை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.