கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 500 ரூபாய் வாடகை செலுத்தி, புலம்பெயர் தொழிலாளி ஒருவர் நாய் கூண்டில் தங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சுந்தர், போதிய வருமானம் கிடைக்காததால், நாய்க்கூண்டிற்கு வாடகை செலுத்தி தங்கியுள்ளார்.
மேலும், அங்கேயே உணவு சமைத்தும் சாப்பிட்டுள்ளார். மனிதாபிமானமற்ற இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், விருப்பத்தின் பேரிலேயே தங்கியதாக கூறியதால் வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஷியாமை அவருடைய நண்பரின் வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.