அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் இசாஹியா கிராஸா என்பவர், 10 ஆண்டுகளாக வீடற்று தெருக்களில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக இந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என இசாஹியா கிராஸா தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவு 1.10 கோடிக்கும் மேல் பார்வைகளையும், 9 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. தொடர்ந்து கிராஸாவை பலரும் வாழ்த்தியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.