பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருவது போன்ற ஏஐ வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஸுகர்பெர்க், கமலா ஹாரிஸ், சீனா அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் வித்தியாசமான உடைகளில் வலம் வருவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், இதுவரை வந்த ஏஐ வீடியோக்களிலேயே சிறந்த வீடியோ இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.