நடிகை ஐஸ்வர்யா ராய் 862 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ளதன் மூலம், அவர் தனது கணவரை விட மூன்று மடங்கு அதிக பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச பிராண்ட் நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அவர் தனது சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
அந்தவகையில் ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வசூலிப்பதாக கூறப்படுகிறது. பிராண்ட்களின் படப்பிடிப்பிற்காக ஒரு நாளைக்கு 6 முதல் 7 கோடி ரூபாய் வரையிலும் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
அவரது கணவர் அபிஷேக் பச்சனின் சொத்தின் நிகர மதிப்பு 280 கோடி ரூபாய் மட்டுமே ஆகும்.